இலங்கையர் ஒருவர் சவூதியில் குத்தி கொலை…

சவூதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்த மற்றொரு நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் 32 வயதுடையவராவார். இவர் ரியாத் தலைநகரில் கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் , கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதினால் ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக சவூதி பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

குறித்த கொலை தொடர்பாக யேமன் நாட்டு பிரஜையொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பணி புரிந்த இடத்தில் பணி புரிந்தவராவார்.

நள்ளிரவு 12.00 மணியளவில் கொலை செய்யப்பட்டவர் தொலைப்பேசி அழைப்பொன்றில் இருந்துள்ள நிலையில் , அப்போது அங்கு வந்த சந்தேக நபர் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக சவூதி பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் , குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க :   வவுனியாவில் புனித யோசவாஸ் திருச்சொரூபம் மீது தாக்குதல்

Related Posts

About The Author

Add Comment