மோட்டார் சைக்கில் விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கல்முனை வீதியில் மாங்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த 19 வயது இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி எருவில் கோடைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மகாலிங்கம் லஷ்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தையிட்டு உயிரிழந்தவர் நான்கு நண்பர்களுடன் இரு மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை (20) இரவு அங்கு சென்று ஆலய வழிபாட்டை முடித்துவிட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வீடு திரும்பும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் பின்னால் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க :   ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை ஜனதிபதி தலைமையில் திறப்பு!

Related Posts

About The Author

Add Comment