திருகோணமலையில் வைரஸ் தொற்றால் இறக்கும் கால்நடைகள்

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தில் ஒரு வகை வைரஸ் தாக்கத்தினால் அண்மைக்காலமாக கால் நடைகள் தொடர்ந்து இறந்துவருவதாகக் கூறப்படுகின்றது.

ஆடுகளும் மாடுகளும் இந் நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகின்ற போதிலும் கூடுதலாக மாடுகளே இறந்துள்ளன.

வெருகல் பிரதேச செயலக தகவல்களின் படி இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக அறியமுடிகின்றது.

உணவு உண்ணாமை, நீர் அருந்தாமை, வாயில் நுரை வருதல் மற்றும் தாடை வீக்கம் போன்ற அறிகுறிகளுடன்தான் மாடுகளும் ஆடுகளும் இறப்பதாக கூறகின்றார் வெருகல் பிரதேச விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளரான செல்வரெத்தினம் டிஷாந்.

விவசாயமும் கால் நடை வளர்ப்பும் தமது பிரதேச மக்களின் பிரதானமான வாழ்வாதாரம் என சுட்டிக் காட்டும் அவர் வழமைக்கு மாறாக இம்முறை கால் நடைகளுக்கு ஏற்பட்டுள்ள இந் நோயின் தாக்கம் காரணமாக கால் நடை வளர்ப்போருக்கு பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந் நோய் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் காலிலும் வாயிலும் ஏற்படும் ஒரு வகை வைரஸ் நோய் என்கின்றார் மாவட்ட உதவி கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரான டாக்டர் எஸ். நிசாம்தீன்.

கால நிலை மாற்றத்தினால் பரவலாம், உணவு மற்றும் காற்று மூலம் பரவக் கூடியது. அது மட்டுமன்றி கால் நடைகளை ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டு செல்லுதல் மூலமும் பரவக் கூடிய தொற்று நோய் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கால் நடை பண்ணையாளர்கள் வருடாந்தம் இந் நோய்க்குரிய தடுப்பு ஊசிகளை ஏற்றுவதன் மூலம் இந் நோயிலிருந்து தமது கால் நடைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இந்தப் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு கால் நடைகளை கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால் நடைகளுக்கு தடுப்பு ஊசி ஏற்றுதல் உட்பட இந் நோயை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் எஸ். நிசாம்தீன் குறிப்பிட்டுள்ளார் என, பிபிசி செய்திகள் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்க :   குமாரபுரம் படுகொலை சந்தேகநபர்களுக்கு மரணதண்டனை வழங்க கோரிக்கை

Related Posts

About The Author

Add Comment