5 வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காதவர் விளக்கமறியல்

திருகோணமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர், ஐந்து வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில், அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருகோணமலை தேவநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், இவர் கடந்த 2013ம் ஆண்டில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐந்து வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையில், நேற்று முன்தினம் (21) சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்படி, அவரை விளக்கமறியலில் வைக்க, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க :   இலங்கையில் பிடிபட்ட 600 கிலோ மதிப்புள்ள இராட்சத திருக்கை!

Related Posts

About The Author

Add Comment