ஒரே குடும்பத்தச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, வெல்லாவளி காகச்சிவட்ட பிரதேசத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெண்ணொருவர், அவரின் சிறிய மகள் மற்றும் தந்தை ஆகிய மூவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின்படி வெல்லாவளி பொலிஸாரினால் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து குறித்த பெண் மற்றும் மகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பலத்த காயங்களுடன் வீட்டிற்கு அருகில் விழுந்து கிடந்த தந்தை பிரதேசவாசிகளால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 24 வயதுடைய பெண், ஒன்றரை வயதுடைய மகள் மற்றும் 56 வயதுடைய தந்தை ஆகிய மூவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்களா? என்று சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்க :   காத்தான்குடியில் காவலாளி சடலமாக மீட்பு

Related Posts

About The Author

Add Comment