மட்டக்களப்பில் முதலைக் கடிக்குள்ளாகி மீனவர் பலி

மட்டக்களப்பு – உப்போடைப் பகுதியில் இன்று அதிகாலை முதலைக் கடிக்குள்ளாகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வாவியில் மீன் பிடிக்கச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைகள் மற்றும் கால்கள் துண்டாடப்பட்ட நிலையில் கல்லடிப் பாலத்திற்கு அருகிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க :   தலைக்கவசம் இன்றி சென்ற இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

Related Posts

About The Author

Add Comment