ஜெயலலிதா குணமாக மண்சோறு சாப்பிட்ட அதிமுக மகளிர் அணியினர்!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல கோளாறு காரணமாக கடந்த பத்து நாட்களாக அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமாக பல்வேறு விதமான வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது நேர்த்தி கடனாக அவர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, முதல்வர் குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என அவர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தார்கள்.

இதையும் படியுங்க :   கருணாநிதியின் ஆசைகள் தெரியுமா..??

Related Posts

About The Author

Add Comment