இவ் விமானதளங்களை அழிக்கத் தயாராகும் அமெரிக்கா

சிரியாவின் விமானதளங்கள் மீது அமெரிக்கா கார்ப்பெட் பொம்பிங் செய்வது குறித்து சிந்திக்கின்றது, இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ரஸ்யா எச்சரித்துள்ளது.

இதேவேளை ரஸ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் பகைமை உணர்வு அதிகரித்துள்ளதை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்ய வெளிவிவகாரஅமைச்சர் சேர்கேய் லவ்ரோவ் அமெரிக்காவின் தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் ரஸ்யாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய தொலைக்காட்சியொன்றிற்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த பேட்டி அமெரிக்காவுடனான உறவினை மேலும் பாதிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா குறித்த அமெரிக்காவின் கொள்கையின் மையப்பொருளாக ரஸ்யா குறித்த அச்சவுணர்வே காணப்படுகின்றது.

அந்த அச்சஉணர்வு வெறுமனே வார்த்தைகளில் மாத்திரம் வெளிப்படவில்லை,அமெரிக்காவின் தீவிர நடவடிக்கைகள் எங்கள் தேசிய நலநன பாதிப்பதுடன் எங்கள் தேசிய பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா குறித்த ரஸ்யாவின் பல கவலைகள் இந்த நம்பிக்கையீனத்திற்கு காரணம்,இதன் காரணமாக பனிப்போர் காலத்தை விட ஆபத்தான சூழல் காணப்படுகின்றது.

நேட்டோ தனது ஆயுதங்களை ரஸ்யாவின் எல்லையை நோக்கி நகர்த்துகின்றது. சிரியாவின் விமானப்படையை முற்றாக செயழிலக்கச்செய்வதற்காக அமெரிக்காவை சிரியாவின் விமானதளங்கள் மீது கார்பெ;ட் பொம்பிங் செய்யுமாறு சில அதிகாரிகள் ஓபாமா நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்,சட்டபூர்வமான சிரியா அரசாங்கத்தின் அழைப்பில் ரஸ்யா அங்கு இரு விமான தளங்களையும் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும் கொண்டிருப்பதை கருத்தில்கொள்ளும்போது அமெரிக்காவின் கார்பெட் பொம்பிங் ஆபத்தானதாக மாறலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்க :   Tamil news line அறிவிப்பு..

Related Posts

About The Author

Add Comment