யாழ்.கோண்டாவில் பகுதியில் பதற்றம்!! மயிரிழையில் உயிர் தப்பிய கடை உரிமையாளர்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது.பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு உள்ளனர்.

அதன் போது கடை உரிமையாளர் கடையினுள் இருந்து சிறிய ஸ்ரூல் ஒன்றினை கொடுத்து வாள் வீச்சினை தடுத்துள்ளார். அதனால் கடை உரிமையாளர் காயமின்றி தப்பிக் கொண்டார்.

இருந்த போதிலும் தாக்குதலாளிகள் வாள் வீச்சினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும் போது கடையில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் , மூவரும் முகங்களுக்கு கறுத்த துணி கட்டி இருந்ததாகவும் , கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க :   வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற தேவையில்லை - அஸ்கிரிய மகா நாயக்கர்

Related Posts

About The Author

Add Comment