டிரம்பின் வெற்றி உரை ; டிரம்பின் மகன் செய்த வேலையினால் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் டிரம்பின் வெற்றி உரையின் போது அவரின் மகன் தூங்கிய காட்சியில் தற்போது இணையத்தளத்தில் பரவி வருகின்றது.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் இளைய மகனான 10 வயது நிரம்பிய பரோன் டிரம்ப் தந்தையின் வெற்றி உரையில் விழித்திருக்க இயலாமையால் அவதியுற்றதை சமூகவலைத்தளங்களில் பலர் விமர்ச்சித்து வருகின்றனர்.

அமெரிக்க நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மிக நீண்ட நேரம் டொனால்ட் டிரம்பினால் குறித்த வெற்றி உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   கடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன்

Related Posts

About The Author

Add Comment