பூண்டு எப்படி முகப்பருக்களை போக்குகிறது என தெரியுமா?

பூண்டு நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டுள்ளது. கிருமிகளை அழிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டை சாப்பிட்டு வர, உடல் பரிபூரண சக்தி பெறும். பூண்டு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, அழகிற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

இவை முகப்பருக்களை எதிர்க்கிறது. சுருக்கங்களை போக்கும். இளமையாக சருமத்தை வைத்திருக்க உதவுகிறது. பூண்டு எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

வறண்ட சருமத்திற்கு : யோகார்டில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். அதே சமயம், பூண்டிலிருக்கும் பேக்டீரியா எதிர்ப்புத் திறன் சருமத்தில் கிருமிகளை தாக்கவிடாமால் காக்கிறது. இவை இரண்டும் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, சிறு கொப்புளங்கள் ஆகியவ்ற்றை ஏற்படாமல் காக்கிறது.

தேவையானவை : யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – 4 பூண்டை பேஸ்டாக்கி அதனுடன் யோகார்ட்டை கலந்து முகத்தில் தேயுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

முகப்பருக்களை போக்க : பூண்டு – 4 பால் – 2 ஸ்பூன் தேன்- 1 ஸ்பூன்

பூண்டை பேஸ்டாக்கி, அதனுடன் தேன் மற்றும் பால் கலந்து, முகத்தில் மாஸ்க் போடவும். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு துணியில் கட்டி அதனைக் கொண்டு முகத்தில் ஒத்தடம் தரலாம். வாரம் இருமுறை செய்தால், முகப்பருக்கள் மறைந்துவிடும். பெரிய முகத்துவாரங்களின் சுருங்கி, அழுக்கை சேர விடாமல் தடுக்கும்.

வெள்ளை பருக்களை போக்க : தேவையானவை : பூண்டு – 2 ஓட்ஸ் – 1 டீ ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் – 2-3 துளி எலுமிச்சை சாறு – அரை டீ ஸ்பூன்

பூண்டை பேஸ்ட் செய்து அதனுடன் ஓட்ஸ், தேயிலை மர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.

இதனை முகத்தில் குறிப்பாக மூக்கில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது வெள்ளை பருக்களை களைந்து சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.

இதையும் படியுங்க :   பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற வேண்டுமா?

Related Posts

About The Author

Add Comment