முன்னாள் காதலிக்கு இரண்டு பிள்ளைகள் : காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணம்- ஆவரங்கால் பகுதியில் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் மனவிரக்தி அடைந்த முன்னாள் காதலன் கத்தியினால் தனது கழுத்தினை வெட்டித் தற்கொலை முயற்சி

 

வன்னியசிங்கம் வீதி, ஆவரங்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த 23வயதுடைய சவுந்தரராஜன் கார்த்தீபன் என்ற இளைஞனே தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

குறித்த இளைஞன் தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறார்.

குறித்த இச் சம்பவமானது கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் யாழ் நகரில்  நிதிநிறுவனம் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த பல வருடங்களாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

காதலித்த யுவதி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவ் யுவதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த யுவதி யாழ் நகரிற்கு இரண்டு பிள்ளைகளுடன் வந்துள்ளதை கண்ட இளைஞன் மனம் நொந்து போயிருந்ததாக குறித்த இளைஞனின் சக நண்பர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனியார் நிறுவனத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உடமையில் வைத்திருந்த கத்தியினால் தனது கழுத்தினை வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட ஏனைய பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு இளைஞனை காப்பாற்றியதுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படியுங்க :   யாழ்ப்பாணத்தில் தொடரும் மாணவர் போராட்டம் .. மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம் மாக மாற வலியுறுத்தல்...

Related Posts

About The Author

Add Comment