அதிபர் ஆசிரியர், பெற்றோர் கவனத்திற்கு, பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை!

கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த நரொருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கிண்ணியா ரியாத் நகரைச் சேர்ந்த 32 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கிண்ணியா – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிட்கு முன்னால் போதை மாத்திரைகளை துவிச்சக்கர வண்டியொன்றில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சமயத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவரிடமிருந்து மூன்று வகையான போதை மத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் ஏற்கனவே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைக்காக போதை மாத்திரைகளுடன் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   வாழைச்சேனையில் மாதிரி கிராம வீடமைப்புக்கு அடிக்கல் நாட்டல்

Related Posts

About The Author

Add Comment