நிலப்பரப்பு கடலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறதா..? திடீரென ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள்..!

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான யாழ்பாணம் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான யாழ்பாணம் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அடைமழைக்கு முந்திய காலப்பகுதி மற்றும் பிந்திய காலப்பகுதியில் கடல் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களில் யாழ்பாணம் குடா நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் மாற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

சில பகுதிகளில் கடல் மட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், சில பிரதேசங்கள் கடல் நீரினால் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

குடாநாட்டின் நிலப்பரப்பு கடலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே யாழ்பாணம் குடாநாடு விரைவில் முழுமையாக கடலில் மூழ்கும் என பேராசிரியர் ஒருவர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதா என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டின் புவியியல் மாற்றம் தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்களினால், அந்தப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

இதையும் படியுங்க :   வேட்டை ஆரம்பம்.. புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கினார். மஹிந்தவை சூழும் அபாய மேகம்!

Related Posts

About The Author

Add Comment