பாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது..

ராஜஸ்தான் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பி.பி.மொகந்தி. இவர், ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தார். கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இவர் தன்னை கற்பழித்ததாக 23 வயது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

கோர்ட்டு உத்தரவின்பேரில், 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், மொகந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், பின்னர் ஓய்வுபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இரவு, ஜெய்ப்பூரில் உதவி போலீஸ் கமி‌ஷனர் முன்பு மொகந்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையும் படியுங்க :   வெளியான திடுக்கிடும் தகவல்கள்! 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: யார் அந்த 34 வயதான சந்தோஷ்குமார்?

Related Posts

About The Author

Add Comment