இது தமிழீழத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம், நிசப்தமற்ற அந்த இரவில் அந்த முகாம் அழிக்கப்படவேண்டும் என அந்த இராணுவ கட்டளை தளத்திற்குள் போராளிகள் ஊடுருவி தாக்கி அழித்த பின்னர் இறந்த இராணுவ வீரர்களின் உடல்களை சோதனை செய்தனர். அப்போது அந்த இராணுவ அதிகாரியின் சீருடையில் அவனது காதலிக்கு வரைந்த மடல் ஒன்றை அந்த போராளிகளின் அணித் தலைவனால் மீட்க்கப்பட்டது. அதில் பின்வருமாறு……………… என்றும் எனக்குள் அழியாத காதலிக்கு….! இதுதான் நான் உனக்கு கடைசியாய் எழுதும் கடிதம் என நினைக்கிறேன். இனிமேல் உன்னை சந்திப்பது என்பது நிட்சயம் அல்ல… ஏனென்றால்; எங்களின் இராணுவம் ஒரு போரைத் தொடங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கு, வெல்ல முடியாத அந்த சண்டைக்கு நானும் போகப்போறேன். என்னுடைய வீட்டுக் கஸ்ரமும், உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசையும் தான் நான் படையில் சேர ஒரு காரணம். இப்ப நான் ஏமாந்து போயிற்றேன் நிமாலி…! உண்மையில் நான் நினைத்தது மாதிரி இங்கு இல்லை. எங்கட நாட்டுக்காக பயங்கர வாதிகளை எதிர்த்து போராட வேண்டும் என்றுதான் அரசாங்கம் சொன்னது. அதற்காகத்தான் நிறைய சம்பளமும் தந்தது. ஆனால்…, இங்கே வந்த பின்புதான் தெரிந்தது, இந்த சண்டையே தேவையில்லை என்று.. நான் என்ன செய்கிறது…? என்னப்போல நிறையப்பேர் இங்கே இருக்கினம். எனக்கு பதவி உயர்வு கிடைக்கும் பொழுது நீ உயர்வாய் நினைத்திருப்பாய், நீ நினைப்பபது போல இங்கே ஒன்றுமில்லை, எனக்கு அநியாயக் கொலைகள் செய்வதுதான் இங்கே வேலை, நான் ஆமியில் சேர்ந்ததை கேவலமாகத்தான் நினைக்கிறன். இந்தப் பதவி என்னை சாவிற்கு முன்னாலதான் நிறுத்தி வைத்திருக்கின்றது.. சிலவேளை நானும் நீயும் சேர முடியாததற்கு நான் செய்த கொலைகள்தான் காரணமோ தெரியவில்லை… கடைசியாய் உனக்கு ஒன்றை சொல்ல நினைக்கிறன். புலிகள் எங்களை விட சிறந்த மன வலிமை… உடல்திறன் …. சிந்தனை சக்தி… போரில் முன்னேறக்கூடிய ஆற்றல்… எதிரிகளை போடிப்போடியாக்கிற ஆயுதப் பயிற்சி… போன்றவற்றில் சிறந்த ஆட்களாக இருக்கினம். நாளைய சண்டையில் தங்களின் நாட்டை மீட்க்கப் போறதும் ஆழப்போறதும் அவங்கள்தான். அப்பாவியாய் அரசால் ஏமாந்து சாவுக்குள் அடைபட்டு எங்களின் படையும் நானும் கூட அழிந்து போறது நிச்சயம். புத்தரிட்ட சொல்லு உன்னை திருமணம் செய்து அவருக்கு முன்னால வரமாட்டேன். முடிந்தால் புத்தரின் பெயரைச் சொல்லி அழிக்கபடுகிற தமிழ் சனத்தைக் காப்பாற்றச்சொல்லு. இப்படிக்கு உன் பண்டார. புலிவீரனின் அஞ்சலி… நீ இறந்தும் இந்த உலகிற்கு உண்மையைச் சொன்னாய். நீ நல்லவனோ கெட்டவனோ தெரியாது….? எங்களின் மண்ணை ஆக்கிரமிக்க வந்ததால அநியாயமாக இறந்து போனாய் …. உனக்காக என் இரண்டு சொட்டுக் கண்ணீர்… அந்த இராணுவ வீரனுக்கு செலுத்திவிட்டு தளம் திரும்பினான். பின்னாளில் இந்தக் கதை குறும்படமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 39 பேர் விடுதலை

Related Posts

About The Author

Add Comment