தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்க்கும் திரிசாவுக்கும் இடையில் மோதல்

படத்தில் த்ரிஷா இருக்கிறாரா இல்லையா என்பது தான் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம். அம்மா கேரக்டரில் நடிக்க சொன்னதால் த்ரிஷா விலகி விட்டார் என முதலில் பேசப்பட்டது. த்ரிஷாவும் தான் விலகியதை ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து, பஞ்சாயத்து நடத்தி த்ரிஷாவை மீண்டும் நடிக்க ஒப்புகொள்ளவைத்தனர். இருப்பினும் தற்போதுவரை த்ரிஷா நடிப்பது சந்தேகமாகவே இருந்தது.

சமீபத்தில் இயக்குனர் ஹரி ஒரு பேட்டியில் த்ரிஷா நிச்சயம் முக்கிய ரோலில் நடிப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் த்ரிஷா அளித்துள்ள விளக்கத்தில் தான் இந்த படத்தில் நடிக்கவில்லை, அதிக முன்பே அறிவித்துவிட்டேன், மீண்டும் அறிவிக்க தேவையில்லை என நினைக்கிறேன் எனகூறியுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் “த்ரிஷா நடிக்கவில்லை என்றால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு பெரிய தொகையை செலுத்த வேண்டியிருக்கும்” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தான் அப்படி கூறவேயில்லை என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க :   அரை குறை நீச்சல் உடையை அணிந்துகொண்டு ஆட்டம்போட்டுள்ள 45 வயதில் கஸ்தூரி!!

Related Posts

About The Author

Add Comment