வேலை தேடுபவரா நீங்கள் இதோ ஜப்பானில் வேலை வாய்ப்பு

இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன்படி, பாராமரிப்பு Caregiver பணிப்பெண் சேவையில் 100ற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்த 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சதது 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலை வாய்பப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன என, அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், 011 27 91 814 என்ற அலுவலக தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ள முடியும் என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க :   Project Manager

Related Posts

About The Author

Add Comment