கஞ்காவுடன் மாட்டிக் கொண்டார் பிரபல கட்சி வேட்ப்பாளர்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் 34 கிலோ கஞ்சா தூளுடன் கைது செய்யப்பட்டவர் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் வேட்பாளர் எனவும் இவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காத்தான்குடி பூநொச்சிமுனை வீதியில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் 34 கிலோ கஞ்சா எடுத்துச் சென்ற முச்சக்கரண்டி சாரதியை கைது செய்ததுடன் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஒரு கட்சியில் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போடியிடும் ஒரு வேட்பாளர் என்று பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவரை நீதிமன்ற அனுமதிபெற்று பொலிஸ் தடுப்பில் வைத்து விசாணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க :   கசிந்த பல தகவல்கள்!தாடி பாலாஜி…… கணவன் மனைவிக்கிடையே யார் அந்த எஸ்.ஐ மனோஜ்?

Related Posts

About The Author

Add Comment