எங்களை விலங்குகளை விட மோசமாக நடத்தினார்கள் என கூறும் நடிகர்கள்

நடிகர்களாக இருந்தால் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாழலாம் என பலரும் நினைத்திருப்பீர்கள். அது முற்றிலும் பொய் என நிரூபித்துள்ளது இந்த இரண்டு நடிகர்கள் சந்தித்த கஷ்டங்கள்.

Aisi Deewangi… Dekhi Nahi Kahi என்ற சீரியலில் நடித்துவந்த நடிகை ஜோதி சர்மா மற்றும் பிரணவ் மிஸ்ரா ஆகியோர் ஜோடியாக நடித்துவந்துள்ளனர்.

இவ்ரகள் தினமும் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் தினமும் 18 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியுள்ளனர். உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட ஷூட்டிங்கை நிறுத்த மாட்டார்கள்.

ஒருமுறை எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஒரு ஸ்டண்ட் காட்சியை படமாகியதால் ஜோதி ஷர்மாவுக்கு பலத்த காயம் பட்டுள்ளது, மற்றொரு முறை தீயில் சிக்கிக்கொள்வது போன்ற சீன் படமாக்கப்பட்டபோது அவர் புகையில் சிக்கியதால் குரல் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் 4 நாள் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என கூறினாலும், இயக்குனர் மறுநாளே ஷூட்டிங் வரச்சொல்லி என்னை கத்தி நடிக்கவைத்தார்.

பிரணவ் இது பற்றி கூறும்போது, “எங்களை விலங்குகளை விட மோசமாக நடத்தினார்கள், இதனால் நாங்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம், அதனால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கிய பிரபல நடிகர் அடையாளம் காணப்பட்டார்...

Related Posts

About The Author

Add Comment