சித்தார்த் மல்ஹொத்ராவின் ஃபிட்னஸ் ரகசியங்கள் இதோ!

மாடலாக இருந்து நடிகரானவர் தான் சித்தார்த் மல்ஹொத்ரா. இது ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர்’ என்னும் திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பிரபலமானார். இவரது அழகிய தோற்றமும், உடற்தொகுதியும் பல பெண்களை அவரது ரசிகைகளாக்கியது எனலாம். பொதுவாக நடிகராகிவிட்டால், தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களது தோற்றத்தை மாற்ற வேண்டும். இதை சித்தார்த் தவறாமல் மேற்கொண்டு வருகிறார். மேலும் சித்தார்த் தனது உடலின் மீது அதிக அக்கறை கொண்டவர். இவர் ஒருபோதும் ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு சோம்பேறித்தனம் கொண்டது இல்லை. சொல்லப்போனால் இவர் உடற்பயிற்சி அடிமை என்றே கூறலாம். இவரது ஜிம் ட்ரெயினர் சதீஷ் நர்கர் ஆவார்.

சித்தார்த் மல்ஹொத்ராவிற்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த விளையாட்டு உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் இவர் ஜிம்மில் மிகவும் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளாமல், கால்பந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சித்தார்த் தன் ஒரு நாள் திட்ட பட்டியலில் நடன பயிற்சி இடம் பெற்றிருந்தால், இவர் ஜிம் செல்வதைத் தவிர்த்து நடன பயிற்சியை மேற்கொள்வார். ஏனெனில் நடனமும் மிகச்சிறந்த ஓர் உடற்பயிற்சி. சொல்லப்போனால் ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதை விட, நடனம் நல்ல உடற்பயிற்சி. இங்கு நாம் பல பெண்களைக் கவர்ந்த நடிகர் சித்தார்த் மல்ஹொத்ரா அவர்கள் பகிர்ந்து கொண்ட, அவரது டயட் மற்றும் ஃபிட்னஸ் இரகசியத்தைத் தான் பார்க்கப் போகிறோம்.

கார்டியோ பயிற்சி சித்தார்த் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன் 10 நிமிடம் வார்ம்-அப் செய்வாராம். இவர் தசைகளை வலிமைப்படுத்தவும், கட்டுடலைப் பராமரிக்கவும் கார்டியோ பயிற்சிகளையும், பளு தூக்கும் பயிற்சியையும் செய்வாராம். மேலும் இவர் ரன்னிங், ஸ்விம்மிங் போன்ற மற்ற பயிற்சிகளையும் அடிக்கடி மேற்கொள்வாராம்.

சரிவிகித டயட் சித்தார்த் எப்போதும் சரிவிகித டயட்டை தான் பின்பற்றுவாராம். எப்போதும் வீட்டில் சமைத்த உணவைத் தான் விரும்பி சாப்பிடுவாராம். வீட்டில் சமைத்த உணவில் தான் அனைத்து விதமான சத்துக்களும், கனிமச்சத்துக்களும் இருக்கும் எனவும் கூறுகிறார். சித்தார்த் மேற்கொள்ளும் டயட்டில் பெரும்பாலும் காய்கறிகளும், பழங்களும் தான் இருக்குமாம்.

புரோட்டீன் உணவுகள் சித்தார்த் அசைவ பிரியர். இவர் சிக்கன், மீன், இறைச்சி போன்ற புரோட்டீன் நிறைந்த அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம். தசைகளின் வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யவும் புரோட்டீன் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் புரோட்டீன் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்ட சரும செல்கள் சரிசெய்யவும் முக்கியம் என்றும் கூறுகிறார்.

இனிப்புகள் சித்தார்த்திற்கு இனிப்பு பலகாரங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். இருப்பினும் இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதைக் குறைக்க முயற்சிப்பாராம். மேலும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை தான் பானங்களில் சேர்த்துக் கொள்வாராம். இவர் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த டார்க் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவாராம்.

10 புஷ்-அப்ஸ் சித்தார்த் மல்ஹொத்ரா, ஒருவர் புஷ்-அப் எடுக்கும் போது சரியாக 10 எடுத்தாலும் போதுமானது என்று கூறுகிறார். ஆரோக்கியமான மனிதனால் தனது மேல் உடல் எடையை கட்டாயம் தாங்க முடியும். எனவே கோர் தசைகளின் வளர்ச்சிக்கு தினமும் 10 புஷ்-அப் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் சித்தார்த் கூறுகிறார்.

பழங்கள் சித்தார்த் அவர்களின் டயட்டில் பழங்கள் முக்கிய பங்கை வகிக்குமாம். இவர் எப்போதும் பழங்களையும், நற்பதமான பழங்களால் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளையும் தான் அதிகம் குடிப்பாராம். அதுவும் சர்க்கரை ஏதும் சேர்த்துக் கொள்ளாமல் தான் பழச்சாறுகளைக் குடிப்பாராம்.

அதிகாலை உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சூரியன் உதிர்க்கும் போது ஒரு நாளின் முதல் உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அதுவும் காலையில் நன்கு வயிறு நிறைய சாப்பிடுவாராம். ஆனால் இவர் இரவு நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், மாறாக வேக வைத்த காக்றிகளைத் தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறுகிறார். ஏனெனில் இவைகள் செரிமானமாவதற்கு தாமதமாகும்.

கோர் தசைகள் சித்தார்த் ஸ்குவாட்ஸ், டெட்லிப்ட்ஸ் மற்றும் செஸ்ட் பிரஸ் போன்ற அதிக எடை கொண்ட பயிற்சிகளை செய்வதன் மூலம், தசைகள் வலிமையடையும் என்று கூறுகிறார். இந்த பயிற்சிகள் தான் கோர் தசைகள் மற்றும் பின்புற முதுகு பகுதிக்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்.

உடலை புரிந்து கொள்ளவும் எப்போதுமே ஒருவர் தனது உடலைப் புரிந்து, உடலுக்கு ஏற்றவாறு தான் எதையும் செய்ய வேண்டும் என சித்தார்த் கூறுகிறார். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்று கண்டதை செய்யாமல், சரியான உடற்பயிற்சியாளரின் உதவியின் பேரில் டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார்.

நீர்ச்சத்து அவசியம் சித்தார்த் அவர்கள் தினமும் அதிகளவு நீரைக் குடிப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பாராம். ஏனெனில் நீர் தான் உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, தசைகளுக்கான ஆற்றலை உடனடியாக வழங்கும். மேலும் நீரை அதிகம் குடித்தால் தான், ஜிம்மில் சரியாக உடற்பயிற்சியை செய்ய முடிவதோடு, உடற்பயிற்சியின் பலனைப் பெற முடியும் என்றும் கூறுகிறார்.

குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சித்தார்த் அவர்கள் மேற்கொள்ளும் டயட் மற்றும் உடற்பயிற்சி ரகசியங்களாகும். இவரைப் போன்றே உடலைப் பெற வேண்டுமென்று இவர் பின்பற்றுவதை அப்படியே பின்பற்றாமல், சித்தார்த் கூறியதைப் போன்று, உங்களுக்கான உடற்பயிற்சியாளரின் பரிந்துரையின் பேரில் டயட் மேற்கொண்டு, ஃபிட்டான கட்டுடலைப் பெறுங்கள்.

இதையும் படியுங்க :   21.02.2019 – இன்றைய ராசிப்பலன்

Related Posts

About The Author

Add Comment