தனியார் சேனலை முற்றுகையிட்ட சூர்யா ரசிகர்கள்,

நடிகர் சூர்யா உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக ரசிகர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளர்கள் இருவர், அவரது உயரத்தை குறித்து பேசி கிண்டலடித்தது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இன்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகம் முன் கூடினர். தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து கண்டன கோஷம் எழுப்பினர். உயரம் முக்கியம் அல்ல உயர்ந்த உள்ளமே முக்கியம் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

,

இதையும் படியுங்க :   மீரா மிதுனின் உச்சகட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Related Posts

About The Author

Add Comment