இதோ விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா?இத படிங்க…

ஆந்திர மாநிலம் லேபக்சி கோயில் பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. அங்க கூட ஒரு தூண் கீழே இணைப்பே இல்லாம அந்தரத்தில் தொங்கிக்கிட்டு இருக்குது. அத்தனை தூண்களுக்கு மத்தியில் ஒரே தூண் அந்தரத்தில் தொங்கியபடி இருப்பதையே விஞ்ஞானிகளால் இன்றளவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனா இதே மாதிரி இரண்டு தூண்கள் தமிழகத்தில் அதும் 2 அரை டன் எடையில் அந்தரத்தில் தொங்கிட்டு இருக்குனு தெரியுமா? வாங்க அது பற்றி பார்க்கலாம்

தர்மபுரி தமிழகத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டமான தர்மபுரியில் உள்ள கோயிலில் அமைந்துள்ளது இந்த தூண்கள். இவை கீழ் தரையுடன் இணைப்பு இல்லாமல், மேலோடு ஒட்டி காணப்படுகிறது. இது லேபாக்ஷியில் காணப்படும் தொங்கும் தூணைப்போல் இருக்கிறது எனினும் லேபாக்ஷியில் ஒரு தூண்தான். இங்கு இரண்டு தூண்கள். தர்மபுரி செல்லும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் இந்த கோயிலுக்கு சென்று பாருங்கள். எப்படி செல்வது என்பது குறித்த தகவல்களை இங்கு நாம் காண இருக்கிறோம்.

இரண்டரை டன் பல்லவமன்னர் கட்டிய இந்த கோயில் இரண்டரை டன் எடை கொண்டது. இது இரண்டும் அருகருகே அமைந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது பேரதிசயமாக பார்க்கப்படுகிறது. இது இரண்டரை டன் எடை கொண்டதாக இருந்தாலும், அந்தரத்தில் தொங்கியபடி, கீழிணைப்பு ஏதும் இல்லாதது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டுவருகிறது.

தொங்கும் ரகசியம் தரைக்கு மேல் இரண்டு செமீ உயரத்தில் இந்த தூண்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இது பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியவில்லை. இதனுள் பக்தர்கள் கைக்குட்டைகளையும், சிறு துணிகளையும் இட்டு பார்க்கின்றனர். அப்போது, அதன் கீழே எந்த இணைப்பும் இல்லாமல் இருப்பது தெரிகிறது. இதை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் செல்கின்றனர்.

தூணின் ரகசியங்கள் இந்த தூணில் சிவபெருமான் நடன மாந்தர்களின் உருவங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தூண்களை நீங்கள் உற்றுப் பார்த்தால் தெரியும். அதில் ஆடல் கலைகளில் வல்லவர்களான நடன மாந்தர்கள் வெவ்வேறு அசைவுகளில் இருப்பதைப் போன்ற வடிவத்தை செதுக்கி வைத்திருக்கிறார்கள். இங்குள்ள எல்லாத்தூண்களிலும் இதைக் காணமுடியும். மேலும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்று இங்கு அடிக்கடி வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மனதில் வேண்டியது உடனுக்குடன் நடத்தி தரும் கோயில் என்றும் பார்க்கப்படுகிறது.

மேற்கூரை ரகசியம் இந்த கோயிலின் மேற்கூரையில் ஒன்பது நவ கிரகங்களின் உருவங்களும் அவற்றின் வாகனங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற கோயில்களில் தரையில்தான் இவை வைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் சில கோயில்களில் சுவற்றிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி அந்தரத்தில் மேற்கூரையில் பொறிக்கப்பட்ட நவக்கிரகங்களை வேறெங்கும் காண்பது அரிதுதான்.

யானைமேல் கட்டிடம் இந்த அம்மன் சன்னதியை பதினெட்டு யானைகள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த கோயில் சன்னதி எல்லாப்பக்கமும் தரைத்தளத்தில் யானை உருவத்தைக் கொண்டுள்ளது. அது யானை உருவம் மொத்த கட்டிடத்தையும் தூக்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

காமேஸ்வரர்கள் காமத்துக்கு உதாரணமாக விளங்கும் கடவுளர்களான காமேஸ்வரரும் காமேஸ்வரியும் இணையும் சிலைகளும் இங்கு அமைந்துள்ளது. கஜூராஹோ எனும் காமத்தின் கோயிலுக்கு நிகராக இல்லாவிட்டாலும், ஓரளவு அந்த கருத்தையே வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சிலைகள் பார்ப்பவருக்கு மனித பிறப்பின் அர்த்தத்தை விளங்கச்செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மிகவும் தொன்மைவாய்ந்த கோயில் இதன் தொன்மையை பறைசாற்றும் வகையில் இந்த கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் இங்கு பாடப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் கண்டெடுக்கப்பட்டது.

எங்கேயுள்ளது அதியமான் நெடுமான் எனும் மன்னன் ஆண்ட பகுதிகளுக்குட்பட்ட தர்மபுரியில் அமைந்துள்ளது இந்த கோயில்.

கோட்டை கோவில் தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கோட்டை கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் வீற்றிருக்கும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் சிவபெருமானிடம் அருள்வரங்களைப் பெற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோட்டை கோவில் ராமாயண நிகழ்வுகள் நடந்த ஒரு பகுதியாக இந்து சமய புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்த கோயிலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் இந்த கோயிலின் பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றன. இந்த கோயிலின் மிக முக்கிய அம்சம் இங்கிருக்கும் தொங்கும் தூண்களாகும்.

சென்றாய பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் இந்த சென்றாய பெருமாள் கோயில் மிக முக்கியமான ஒன்றாகும். தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் முதலில் முட்டை வடிவில் அமைந்த ஒரு அரச கோட்டையாகும். முற்கால தமிழ் மன்னரான அதியமானின் தலைநகராக இந்த கோட்டை இருந்திருக்கிறது என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர். கிருஷ்ண தேவராயர் மற்றும் ராய்சல அரசர்கள் இந்த கோட்டையில் சென்றாய பெருமாள் கோயிலை கட்டினர். இந்த கோயிலுக்கு முன் மிக நீண்ட பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் வழியாக சென்று கோயிலின் உட்பிரகாரத்தை அடையலாம்.

சிஎஸ்ஐ சீயோன் ஆலயம் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த இந்த ஆலயம் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் உலக அளவில் பெயர் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஆலயம் ஒரு வழிபாட்டு ஸ்தலமாக மட்டும் இல்லாமல், சமூக சேவைகளை செய்யும் ஒரு முக்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் வழங்கப்படும் உதவிகள் மூலம் ஏராளமான ஏழை குடும்பங்கள் பலன் பெறுகின்றனர்.

அனுமான் தீர்த்தம் தர்மபுரியில் அமைந்திருக்கும் மிக முக்கிய புனித ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமான் தீர்த்தம், இராமாயணத்தோடு தொடர்பு கொண்டது. ஊத்தங்கரைக்கு 55 கிமீ தொலைவில் இருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்த அனுமான் தீர்த்தம் அமைந்துள்ளது. மேலும் இந்த அனுமான் தீர்த்தம், தீர்த்தமலைக்கு வெகு அருகில் உள்ளது. எனவே தீர்த்தமலைக்கு வருவோர் கண்டிப்பாக அனுமான் தீர்த்தத்தைக் கண்டு களிப்பர்.

அதியமான் கோட்டை அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை களிமண்ணால் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுயில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர்.

மேட்டூர் அணை இந்த அணையில் தயாரிக்கப்படும் மின்சாரம் தருமபுரி மாவட்டும் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. மேட்டூர் நகரத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சமய ரீதியலான முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மேட்டூர் அணைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டு இந்த அணையில் ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த மேட்டூர் அணை ஸ்டான்லி நீர்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணையில் இரண்டு ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

மவுண்ட் கார்ல் ஆலயம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மவுண்ட் கார்மல் ஆலயம் தர்மபுரி மாவட்டத்தின் ஒரு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் பி.பள்ளிபட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த இந்த ஆலயம் தமிழ்நாட்டின் மிக முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழைய கோதிக் கட்டிடகலையில் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயம் இந்து சமய கோயில்களை போல காட்சியளிக்கும். இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தீர்த்தமலை தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூருக்கு அருகில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பெருமளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த தீர்த்தமலையில் இருந்து ஐந்து நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.

இதையும் படியுங்க :   சனி ஆழப்போகிறார்..? குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா..

Related Posts

About The Author

Add Comment