துடிக்க துடிக்க பிஞ்சு குழந்தையின் கழுத்தை அரிவாளால் வெட்டிக் கொன்ற தாய் …!

பால் கேட்டு அழுத தனது ஒரு வயது பிஞ்சு குழந்தையை இரக்கமற்று கழுத்தை அறுத்து கொன்ற தாயை போலிசார் கைது செய்துள்ளது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாலிற்காக குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்து சிறிய அரிவாளால் குழந்தையின் கழுத்தை அறுத்து அழுகை சத்தத்தை நிறுத்தி இரக்கமற்று கொன்று விட்டு, வீட்டிலிருந்து தனியாக வெளியே சென்றுள்ளார்.
குழந்தையின் அழுகை சத்தம் திடீர் என நின்று விட்டதே வீட்டை அடைத்து விட்டு இவள் தனியாக செல்கின்றாளே என பக்கத்து வீட்டு காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கே ஒரு வயது குழந்தை களுத்து அறுபட்டு மாண்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கணவர் தன் குழந்தையை மனைவி கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். அனிதா என்ற அந்த பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.
தன் குழந்தை மீது சிறு துரும்பு பட்டாலும் துடி துடித் போகும் தாய்மார்களுக்கு மத்தியில் இப்படியும் ஓர் இரக்கமற்ற வெறிபிடித்த தாய் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பக்குவப்படாத நிலையில் சிறுவயதில் தங்களது குழந்தைகளுக்கு திருமணத்தை முடித்து கொடுத்து விடுவதால் இது போன்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...

Related Posts

About The Author

Add Comment