கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் : பெண் இன்ஜினியர் கொன்று எரிப்பு ;

சூளகிரி: கர்நாடக பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை, அவருடைய கணவர் காரில் அழைத்து வந்து, சூளகிரி அருகே எரித்து கொலை செய்தார். கள்ளத்தொடர்பு வைத்ததால் கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் அவருடைய நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் வனப்பகுதியில், கடந்த மாதம் 6ம் தேதி இளம்பெண் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கருகிய உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்ணை கொன்று தீயிட்டு எரித்தது தெரியவந்தது. சூளகிரி போலீசார் பெண்ணின் தடயங்களை அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பி வைத்தனர். அருகில் உள்ள கர்நாடக மாநில போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு சம்மங்கிராம் போலீசில் தனது மகள் மாயமாகி விட்டதாக ரேகா என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், கர்நாடக போலீசார் சூளகிரி வந்து விசாரணை நடத்தினர். உடல் பாகங்களை ஆய்வு செய்ததில் புகார் அளித்த ரேகாவின் மகள் ஹர்ஷிதா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருடைய கணவர் சந்திரகாந்த் (35) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மனைவியை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறுகையில், சந்திரகாந்த்துக்கும், ஹர்ஷிதாவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார். சந்திரகாந்த் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி ஹர்ஷிதா, பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் ஒருவருடன் ஹர்ஷிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் சந்திரகாந்த் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.

மனைவியை சரமாரியாக தாக்கியதில் அவர் இறந்துள்ளார். பின்னர் நண்பரான ரவீந்தர்சிங் (25) உதவியுடன், தமிழக வனப்பகுதியான கோபசந்திரம் பகுதிக்கு ஹர்ஷிதாவின் உடலை கொண்டு வந்து எரித்து விட்டு தப்பியோடியுள்ளனர் என்றனர். இதையடுத்து ஹர்ஷிதாவின் தாய் ரேகா அளித்த புகார் அடிப்படையில், பெங்களூரு போலீசார் தலைமறைவாக இருந்த கணவர் சந்திரகாந்த், அவரது நண்பர் ரவீந்தர்சிங் ஆகியோரை கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருப்பதால், கொலை செய்து உடலை வீசி செல்லும் சம்பவம் அதிகப்படியாக நடக்கிறது. இங்கு கடந்த ஓராண்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கள்ளக்காதல் கொலைகள் நடந்துள்ளன. கர்நாடக, ஆந்திர மாநில எல்லை அருகில் உள்ளதால், கொலை செய்யும் நபர்கள் உடலை இங்குள்ள வனப்பகுதியில் போட்டு விட்டு செல்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழக, கர்நாடக போலீசார் இதற்கு தீர்வு காண வேண் டும் என ஓசூர், சூளகிரி பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படியுங்க :   மர்மமாக இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் எரிக்க முயன்ற கணவர்!

Related Posts

About The Author

Add Comment