முதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்!! – மைத்திரி அதிரடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முன்னர் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேசினார். ஆளுநரொருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தற்போது சேவையிலுள்ள அனைத்து ஆளுநர்களும் இடமாற்றப்படவுள்ளனர்.

இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும், தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வடமத்திய மாகாண ஆளுநராகவும், வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறியமுடிந்தது.

இதுவரை மேல் மாகாண ஆளுநர்களாக தமிழர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடக்கு மாகாண ஆளுநர்களாக சிங்களவர்களே நியமனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது – என்றுள்ளது.

இதையும் படியுங்க :   அதிர்ச்சி தகவல்! 9வது குண்டுவெடிப்புக்கு காரணமான இவர்தான்!!

Related Posts

About The Author

Add Comment