யோகாசனம் செய்து மாணவி கின்னஸ் சாதனை முயற்சி

கோவையில் மூன்று வகை யோகாசனம் செய்து மாணவி கின்னஸ் சாதனை முயற்சி

மாணவி வைஷ்ணவி
கோவை:

கின்னஸ் சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர்களின் முன்னிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாணவி எஸ்.வைஷ்ணவி முதலாவதாக நீண்ட நேர தாடை நிலைப்பாடு யோகாவை 7 நிமிடம் செய்தார். இதன் முந்தைய சாதனை 2 நிமிடம் ஆகும்.

இரண்டாவதாக குறுகிய நேரத்தில் முறுக்கிய மார்பு நிலையில் பாதத்தை பயன்படுத்தி ஆறு முட்டைகளை கப்பில் போடுவது இதனை 18.28 வினாடிகளில் செய்து முடித்தார். இதன் முந்தைய சாதனை 21.52 வினாடிகள் ஆகும். மூன்றாவதாக குறுகிய நேரத்தில் முறுக்கிய நிலையில் 20 மீட்டர் பயணிப்பது இதனை 13.8 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் முந்தைய சாதனை 15.54 வினாடிகளாகும்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டி நான் கடந்த சில நாட்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். யோகா ஆசிரியர் ராமு மற்றும் லட்சுமணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நான் தினமும் காலை, இரவு பயிற்சி செய்தேன். இந்த முயற்சியில் நான் அதை சாதகமாக்குவேன் என்று உறுதியாக உள்ளேன்.

நான் ஒன்பது வயதில் இருந்து யோகா பயிற்சி செய்கிறேன். 550 மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இதுவரை 250 பதக்கங்களை வென்றுள்ளேன், அவற்றில் பெரும்பாலானவை தங்கம் ஆகும் என்றார். #yoga #Vaishnavi

இதையும் படியுங்க :   வரதட்சனை பணத்திற்காக ஆணைப் போல் நடித்து இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

Related Posts

About The Author

Add Comment