11 நாள் கைக்குழந்தை புரிந்த சாதனை

அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில், நேற்று நடந்த வாக்கெடுப்பின் போது சபைக்குள் நுழைந்து பிறந்து 11 நாட்களே ஆன கைக்குழந்தை சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக, ப்ரிடென்ஸ்டைன் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமித்தார்.

ஆனால், அவரின் இந்த நியமனத்திற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம் என்பதால், இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் செனட் உறுப்பினரான டாம்மி டக்வொர்த் என்ற பெண்மணி, பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார்.

இவர் ராணுவ வீராங்கணையாக இருந்தபோது, ஈராக் போரில் தனது இரு கால்களையும் இழந்தவர் ஆவார்.

வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதி, கடந்த புதன்கிழமை தான் திருத்தியமைக்கப்பட்டது.

இதன்மூலம், வாக்கெடுப்பின் போது செனட் சபையில் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை அந்த குழந்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், 50 உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் 49 உறுப்பினர்களின் எதிர்ப்பு என்ற விகித்தத்தில் ப்ரிடென்ஸ்டைன் வாக்கு பெற்றதால், அவர் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இதையும் படியுங்க :   2018ல் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்..! 5079ல் உலகம் அழிந்துவிடும்..!

Related Posts

About The Author

Add Comment