இலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு

அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில், பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.கல்வியமைச்சு இன்று இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை, காற்றுடன் சீரற்ற வானிலை நீடிக்கின்றது. இந்நிலையில், பாடசாலைகளை கொண்டுநடத்துவது தொடர்பாக கல்வியமைச்சின் ஆலோசனைகளை பெறத் தேவையில்லை என்றும், நிலைமையை அவதானித்து தீர்மானம் எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தின் நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் தெஹியோவிட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் வடமாகாண சபையின் யோசனை நிறைவேற்றம்

Related Posts

About The Author

Add Comment