ரகுவரன் மரணத்தில் நிகழ்ந்தவை வேறு யாருக்கும் நடக்க கூடாது

தமிழ் சினிமாவில் வில்லத்தனமான நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ரகுவரன். புரியாத புதிர் படத்தில் ‘ஐ நோ’ எனும் ஒரு வார்த்தையை பல்வேறு விதமாக பேசி மிரட்டியிருப்பார். பாட்ஷா படத்தில் ஆண்டனி.. மார்க் ஆண்டனி.. என ரஜினியிடம் கெத்து காட்டியிருப்பார்.


தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் நான் யாரை நம்பியும் இல்ல.. என்று ஒரு நடுத்தரவர்க்க அப்பாவாக குணச்சித்திர நடிப்பிலும் வாழ்ந்திருப்பார். இதுபோன்று தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் நியாயம் செய்யும் கலைஞன் ரகுவரனை காலம் கொண்டு சென்று விட்டது. எனினும் அவர் விட்ட இடம், தமிழ் சினிமாவில் அப்படியே இருக்கிறது.

இந்நிலையில் ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகினி சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரகுவரனின் இறுதி நிகழ்ச்சியில் நடந்த விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில்,

“ரகுவரன் மரணத்தின் போது செய்தியாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன். எல்லோரும் சரி என்றார்கள். ஆனால், நான் என் மகனை அழைத்து வந்தபோது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.

உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை. அந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது” என்று வேதனையை தெரிவித்தார்.

இதையும் படியுங்க :   ஆண்ட்ரியா - சன்னி லியோன் கைகோர்ப்பு

Related Posts

About The Author

Add Comment