மட்டக்களப்பில் எட்டப்பன் இருந்தாலும் வரலாறு காணாத பூரண ஒத்துழைப்பு!

மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமான நிலையில் காணப்பட்டது.இதில் அரச போக்குவரத்துச் சேவை சில பகுதிகளுக்கு இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பின் வரலாற்றில் தமிழர்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டும் ஓர் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆம் கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளை நம்பி எவ்வித பிரயோசனமுமில்லை இதுவரை இழந்தது போதும் இருப்பவற்றையாவது தக்க வைக்க வேண்டும் தங்களது இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் வளச் சுரண்டலை தடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் சாத்வீக ரீதியிலான கர்த்தால் நிகழ்வை மனசாட்சிக்கு ஏற்ப நடத்திக் கொண்டிருக்கின்றனர்

படுவான்கரை பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்து எதுவும் இடம்பெறாத நிலையில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், சில பிரதேசங்களில் வீதிகளில் டயர் போட்டு எரியூட்டப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நீதி கோரும் சிவில் அமைப்பு உள்ளிட்ட எதிரணியினரால் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அவர்களால் ஹரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் 07.09.2018 இன்று இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் பாடசாலைகளில் இயங்கவில்லை

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.

மேற்படி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசணத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத் தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத் திட்டம் அமையவுள்ளது.

ஏற்கனவே குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறையாக காணப்படும் இப் பகுதிகளில் இவ்வாறான ஒரு தொழிற்சாலை அமைவது இப்பகுதியில் வாழும் கிராம மக்கள் என்ற ரீதியில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பை தெரிவித்துக்ளும் முகமாக மட்டக்களப்பு இன்றைய தினம் பூரண ஹர்த்தால்.
இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை

Related Posts

About The Author

Add Comment