பிரித்தானியாவின் குட்டி இளவரசி!

பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட் அரண்மனைக்கு வரும் விருந்தினர்களை மிகவும் தைரியமாகவும், பண்போடும் வரவேற்கிறார்.

சார்லோட் எலிசபெத் டயானாவுக்கு தற்போது வயது 3. தனது வயதுக்கு மீறிய அறிவோடு இவர் திகழ்கிறார். இவரது அண்ணன் ஜார்ஜ் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்.

பொது இடங்களிலும், வீட்டிலும் எப்போதும் அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறார். ஆனால் தங்கை சார்லோட் அப்படி கிடையாது. பொது இடங்களில் புகைப்படக்காரர்களை மிகவும் தைரியமாக எதிர்கொள்வார். இந்த வயதிலேயே இரண்டு மொழிகளை பேசும் திறமை பெற்றுள்ளார்.

அரண்மனைக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், அவர்களிடம் சென்று டீ, காபி மற்றும் உணவு அருந்துகிறீர்களா என அன்போடு கேட்டு உபசரிப்பு செய்வதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு இளவரசர் ஜார்ஜை விட சார்லோட்டையே மிகவும் பிடித்துள்ளது.

இதையும் படியுங்க :   கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவிக்கு 4 ஆண்டுகள் சிறை….

Related Posts

About The Author

Add Comment