கமலுடன் மோதும் பிக்பாஸ்?

பிக்பாஸ் இறுதி சுற்றின் போது மக்களின் பார்வையை அதிகரிக்க அதிரடியாக சில காரியங்களை பிக்பாஸ் டீம் செய்துள்ளது. இப்போது உள்ள  போட்டியாளர்களில் ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என முடிவு செய்து, ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்து வருகிறது பிக்பாஸ் டீம். இதற்கிடையே ஐஸ்வர்யாவை காப்பாற்ற முயற்சிப்பதுக்கு கமல் எதிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த வாரம் சென்றாயன் வெளியேற்றப்பட்ட போது, ஐஸ்வர்யாவை அவரே நாமினேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்நிலையில் கமலின் எதிர்ப்பை சமாளிக்க, ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றின் போட்டியாளர்களான சினேகன், காயத்ரி ரகுராம், சுஜா, ஆரவ், வையாபுரியை பிக்பாஸ் டீசம் களம் இறக்கியுள்ளது. இவர்களது வேலை, ஐஸ்வர்யாவை நல்லவராக காண்பிக்க முயற்சிப்பது, மும்தாஜை மோசமானவராகக் காட்டுவது.
இதற்கான வேலையில் அவர்கள் வந்த முதல் நாளிலிருந்தே செய்து வருகிறார்கள். மும்தாஜை வந்த நாள் முதலே அவர்கள் கட்டம் கட்டி அழ வைத்து  வருகிறார்கள். ஐஸ்வர்யாவைத் துள்ளிவிளையாடும் பள்ளிக் குழந்தை போல் அனைவரும் தாங்குகிறார்கள். பாலாஜி மீது ஐஸ்வர்யாக குப்பையை கொட்டியதை  பெரிய விஷயம் இல்லை என்று சக போட்டியாளர்களை நம்பவைக்கிறார்கள். ஐஸ்வர்யா சினேகனுடன் டூயட் பாடுகிறார். காயத்ரி ரகுராமோ, ஐஸ்வர்யா சென்றாயனை டாஸ்குக்காக ஏமாற்றியதை நியாமான விஷயம் தான் என்கிறார். இதன் மூலம் ஐஸ்வர்யாவை காப்பாற்ற தடையாக உள்ள விஷயங்களை அகற்ற பிக்பாஸ் டீம பகீர்தனம் செய்வது தெரிகிறது ஒருபக்கம் ஐஸ்வர்யா எவிக்சனில் இருந்தாலும், மறுப்பக்கம் இறுதி வாரம் வரும் வரை ஐஸ்வர்யாவை  வைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள்.  யாஷிகா, ஐஸ்வர்யா இருவரில் யாரோ ஒருவர் கடைசி வரை இருக்கப்போவது கன்பார்ம்.
இதையும் படியுங்க :   வில்லன் பொன்னம்பலம் எப்படி இருக்கிறார் தெரியுமா?

Related Posts

About The Author

Add Comment