டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த11 பேர் மரண விவகாரம் : தற்கொலை இல்லை என திடுக்கிடும் தகவல்!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அது தற்கொலை இல்லை எனவும் விபத்து என்றும் சிபிஐ நடத்திய உளவியல் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்து கிடந்தனர். இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், வயதான பெண்மணி தரையிலும் சடலமாக கிடந்தனர்.

விசாரணையில் சொர்க்கத்தை அடைய போகிறோம் என்ற மூடநம்பிக்கையில் 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான கடிதங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஐ சார்பில் முதலில் நடத்தப்பட்ட உளவியல் உடற்கூராய்வின் அடிப்படையில் இது தற்கொலை என முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இது தற்கொலை அல்ல விபத்து என்று இப்போது கூறப்பட்டுள்ளது.

அதாவது சொர்கத்தை அடைவதாக மதச்சடங்குகளை செய்யும் போது தவறுதலாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்கள் யாருக்கும் தங்கள் உயிரை விட விருப்பமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க :   முச்சக்கரவண்டி ஓட்டுநரின் மகள் நீதிபதி கனவை வென்றார்

Related Posts

About The Author

Add Comment