ஹபரணை மற்றும் பலுகஸ்வெவவுக்கிடையில் 5 யானைகளை பலி எடுத்த புகையிரதம் தடம் புரண்டது

ஹபரணை மற்றும் பலுகஸ்வெவவுக்கிடையில் தொடருந்தில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் இரண்டு யானைகளும், யானை குட்டி ஒன்று சம்பவ இடத்தில் உயிரிழந்தன.

எனினும், உயிரிழந்த இரண்டு யானைகளும் குட்டிகளை பிரசவிக்க இருந்துள்ளமை பின்னரே தெரியவந்துள்ளது.

ஒரு யானை, சம்பவ இடத்தில் குட்டி ஈன்றதுடன், அதே இடத்தில் அந்த குட்டியும் மரணித்துள்ளது.

யானை ஒன்று 22 மாதங்களில் குட்டி ஈனுகின்ற நிலையில் பலியான மற்றைய யானையின் வயிற்றில் 18 மாத குட்டியாக இருந்த யானையும் சம்பவத்தில் மரணித்துள்ளது.

இந்த விபத்தையடுத்து, மட்டக்களப்பு வரையான தொடரூந்து சேவை மஹாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பத்தின் போது தொடரூந்து பாதைக்கும், தொடருந்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிப்படைந்த தொடருந்து, கொலன்னாவ எண்ணெய் கலஞ்சிய சாலையில் இருந்து மட்டக்களப்பு வரையில் எண்ணெய் கொண்டு செல்லும் தொடரூந்தாகும்.

இந்த விபத்தில் தொடருந்தின் இரண்டு எண்ணெய் தாங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க :   புலிகளின் முன்னாள் திருகோணமலை புலனாய்வு பொறுப்பாளர் கலையரசன் கைது

Related Posts

About The Author

Add Comment