இன்றைய ராசி பலன் (20-09-2018)…………..

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 4ம் திகதி, மொகரம் 9ம் திகதி, 20-09-2018 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 2:28 வரை;

அதன் பின் துவாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3:59 வரை; அதன்பின் திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு.மேஷம்:

எதிரி இடம் மாறிப் போகிற சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு தேவை திருப்திகரமாக நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும்.

ரிஷபம்:

புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள் .தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு சீராக இருக்கும்.வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

மிதுனம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது .தொழில், வியாபாரத்தில் நவீன மாற்றம் தேவைப்படும். சுமாரான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல்நலத்திற்கு சீரான ஓய்வு அவசியம்.

கடகம்:

முக்கிய செயல் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

சிம்மம்:

திட்டமிட்ட செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். கொஞ்சம் அறப்பணி செய்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.

கன்னி:

குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். .தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

துலாம்:
பேசுவதில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். இஷ்டதெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்:

நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு எளிதாக நிறைவேறும். பணவரவு அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி செல்வாக்கு மேம்படும்.

தனுசு:

முக்கிய செயல் நிறைவேறுவதில் தாமதமாகலாம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கும். உறவினர் வருகை புரிவர். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும்.

மகரம்: 

சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப பிரச்னையில் சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கும்பம்:

முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். திடீர் நிர்வாகச்செலவால் சிரமம் ஏற்படலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்:

உங்களிடம் பலரும் அன்பும் நட்பும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். காணாமல் தேடிய பொருள் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும்.அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

இதையும் படியுங்க :   இன்றைய நாள் 09.12.2018 உங்களுக்கு எவ்வாறு அமைய போகிறது

Related Posts

About The Author

Add Comment