உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே விந்தணு பரிசோதனை செய்வது எப்படி?

சமீப காலங்களில் உண்டாகியிருக்கிற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், உணவு, மரபணு ஆகிய அத்தனையிலும் ஏற்பட்ட மாற்றங்களால் ஆண்மைக் குறைபாடு அதிக அளவில் உண்டாகிறது.

அதற்குக் காரணம் விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்ளாததே.

பொதுவாக, குழந்தையின்மை பிரச்னை இருப்பவர்கள் செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும்போது, மருத்துவர்கள் ஆணின் விந்தணுக்களைச் சோதித்துப் பார்த்தே முடிவு செய்வார்கள்.

மருத்துவர்கள் விந்தணு சோதனை செய்யும்போது ஆண்களின் விந்துவை சாம்பிள் எடுத்துத் தர வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.

இதனால் மருத்துவமனையில் தரப்படும் அறை அல்லது மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அல்லது கழிப்பறைக்குப் போய் தான் விந்தணு சாம்பிள் எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சிக்கல்களையும் தர்ம சங்கடங்களையும் போக்குவதற்காக மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம் என்ற நிறுவனம் யோ (yo) என்றும் கைக்கு அடக்கமான சாதனம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

 

இந்த யோ என்னும் கருவியை ஐபோன் அல்லது சாம்சங் கேலக்ஸி போனுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

இந்த சாதனத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆண்களின் விந்து திரவத்தில் இருக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை, நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத விந்தணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன. எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த சாதனம் ஒரு கண்ணாடி, விந்தணுக்களை உறிஞ்சிக் கொள்ளும் பிப்பெட், ஒரு நுண்ணோக்கி ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதில் உள்ள நுண்ணோக்கியை நம்முடைய மொபைல் கேமராவுடன் பொருத்தி, கண்ணாடித் தகட்டில் விந்து திரவத்தை வைத்துப் பின் யோ சாதனத்துடன் இணைக்க வேண்டும்.

இதன்மூலம் மொபைல் செயலி விந்தணுக்களின் தன்மை பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்துவிடும்.

செயற்கை கருத்தரிப்பை விரும்புவர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கிறது.

இதையும் படியுங்க :   உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கும் முன் இதை கவனியுங்கள் பெண்களே!

Related Posts

About The Author

Add Comment