கைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை கோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து உத்தரவிடப்பட்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பகிரங்கமாக கூறினார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கூற்றானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க :   ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டாம்; ஊடக சந்திப்பில் கடிதத்திற்கு தீ வைப்பு

Related Posts

About The Author

Add Comment