இலங்கையில் நடந்த கொடூரம்…!! ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…

கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில் 38 வயதுடைய தாயொருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார்.

குழந்தை வீறிட்டு அழவே அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment