கூகுளின் அதிரடி அறிமுகம் – இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்”

கடந்த வருடம் ஆப்பிளின் ஏர்பாடுகளுக்குப் போட்டியாக பிக்ஸல் 2 மொபைலுடன் தங்களது பிக்ஸல் பட்ஸ் என்னும் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியது கூகுள். இந்த பிக்ஸல் பட்ஸின் சிறப்பம்சமாகப் பார்க்கப்பட்டதே இதில் இருந்த ரியல்-டைம் மொழிபெயர்க்கும் வசதிதான். கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் செயல்படும் இந்த வசதியை பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் தந்திருந்தது.

இப்படி கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் சிறப்பாகக் கொடுக்கப்பட்டு வந்த இந்த வசதியை இனி கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் உடைய அனைத்து ஹெட்போன்களிலும் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. இதை தங்களது வாடிக்கையாளர் சப்போர்ட் பக்கத்தில் தெரிவித்தது கூகுள்.

அதன்படி கூகுள் ட்ரான்ஸ்லேட் அசிஸ்டன்ட் ஆப்டிமைசேஷசன் செய்யப்பட்ட அனைத்து ஹெட்போன் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இதன்மூலம் பலவிதமாக இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு நீங்கள் பேசுவதை ஹெட்போனில் இருக்கும் மைக்கில் ரெக்கார்ட் செய்து உடனுக்குடன் நீங்கள் செட் செய்திருக்கும் விருப்பத்துக்கேற்ப கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்து மொபைல் ஸ்பீக்கரில் ஒளிபரப்பும் கூகுள் அசிஸ்டன்ட். அதாவது இதன் மூலம் மொழி தெரியாத ஒருவருடன் நேரடியாக உங்களால் பேச முடியும். நீங்கள் தாய்மொழியில் பேசுவதை இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்து மொபைலில் ஒலிபரப்புவதுடன் எதிரே பேசுபவரின் மொழியை உங்கள் மொபைலில் மொழிபெயர்த்து ஹெட்போன்களில் இது ஒலிபரப்பும். மேலும் இதனால் பல நன்மைகள் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது. தற்போதைக்கு சுமார் 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது இது. இதில் தமிழ் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பிக்ஸல் பட்ஸ் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வராததால் இந்த வசதி இப்போதுதான் முதல்முறையாக நம்மூருக்கும் கிடைக்கவுள்ளது.

இதையும் படியுங்க :   இரட்டை Ultrapixel கமெரா வசதியுடன் வெளியாகும் HTC One M10 ஸ்மார்ட்கைப்பேசி

Related Posts

About The Author

Add Comment