சார்லஸ் என்னை சந்தித்தபோது அப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை: டயானா

பிரித்தானிய இளவரசர் சார்லஸ், டயானாவுடனான நிச்சயதார்த்தத்தை அறிவித்த நேரத்தில், இருவரும் சில முறை மட்டுமே சந்தித்திருந்தனர்.

ராஜ குடும்பத்தினருக்கும் பிரித்தானியர்களுக்கும் சார்லஸ் தனது 30 வயதுகளிலிருக்கும்போதே செட்டில் ஆவதில் பெருமகிழ்ச்சி.

எல்லா ராஜ குடும்ப தம்பதிகளையும்போலவே சார்லசும் டயானாவும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர், பேட்டிகள் கொடுத்தனர்.

அப்போதும், அதைத் தொடர்ந்தும் நடந்த சில சம்பவங்கள் தன்னை எவ்வாறு அதிர்ச்சியடையச் செய்தன என்பதை, பின்னர், தான் இறப்பதற்கு முன், அளித்த பேட்டிகளை தொகுத்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் டயானா.

பேட்டி எடுப்பவர், நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா? என்று கேட்க, சற்றும் யோசிக்காமல், நிச்சயமாக என்று உணர்வுப்பூர்வமாக கூறியிருக்கிறார் டயானா.

ஆனால் சார்லசோ சற்று தயக்கத்துடன் ‘Whatever love means’ என்று கூறினார். அந்த பதில் டயானாவை அதிர்ச்சியடையச் செய்தது.

ஒருவர் இன்னொருவரை காதலிக்கிறார் என்றால், ஆம் நான் அவளை காதலிக்கிறேன் என்ற பதில்தான் வரும், ஆனால் சார்லஸ் சொன்ன பதில் டயானாவை வெகுவாக பாதித்தது.

அதேபோல் இன்னொரு சம்பவத்தையும் பற்றி குறிப்பிடுகிறார் டயானா. சார்லஸ் தன்னை முதல் முறை சந்திக்கும்போதே, உடல் ரீதியாக தன்னிடம் பழகுவதிலேயே குறியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.

சார்லஸ் தோலில் ஏற்படும் அரிப்பைப் போல தன் உடல் முழுவதும் படர்ந்ததாக தெரிவிக்கும் டயானா, முதல் சந்திப்பிலேயே முத்தத்திற்காக அலைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   வேனிலிருந்து தப்பும் காட்சி தீயாகப் பரவி, தர்ம சங்கடத்தில் தெ.ஆப்ரிக்கப் போலிஸ்

Related Posts

About The Author

Add Comment