2018-ம் ஆண்டின் இந்திய பணக்காரர் பட்டியல்: நயன்தாராவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

2018-ம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்திய பிரபலங்களின் டாப்-100 போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

இந்தியாவில் 2018-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 253.25 கோடி ரூபாய் வருவாய் உடன் முதலிடம் பெற்றுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். இரண்டாம் இடத்தில் 228.09 கோடி ரூபாய் வருவாய் உடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அடுத்த மூன்றாம் இடத்தில் 185 கோடி ரூபாய் உடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளார்.

டாப்-10 பட்டியலில் வழக்கம் போல் அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் உள்ளனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான். இந்த ஆண்டு திரைப்படங்கள் ஏதும் ரிலீசாவததால் டாப்-2 இடத்திலிருந்து 13-ம் இடத்துக்குச் சரிந்துள்ளார். இன்றைய ட்ரெண்டிங் பட்டியலில் உள்ள பிரியங்கா சோப்ரா 7-ம் இடத்திலிருந்து 49-ம் இடத்துக்கு சரிந்துள்ளார்.

டாப்-100ல் முதன்முறையாக டாப்-5 இடத்தைக் கைப்பற்றிய முதல் பெண் என்ற பெருமையப் பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோன். மேலும் நடிகைகள் ஆலியா பட், அனுஷ்கா சர்மா, நயன்தாரா மற்றும் பேட்மின்டன் வீராங்கணை பிவி சிந்து ஆகியோரும் டாப் 100 பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இதில் நயன்தாரா 15.17 கோடி ரூபாய் வருவாய் உடன் 69-வது இடம் பிடித்துள்ளார்.

இதையும் படியுங்க :   சிம்புவின் தம்பி குரளரசனின் திருமண புகைப்படங்கள்

Related Posts

About The Author

Add Comment