பிரித்தானியா இளவரசி டயானா பாரீஸில் உயிரிழந்த நிலையில்! சார்லசுடன் வாக்குவாதம் செய்த மகாராணி…

பிரித்தானியா இளவரசி டயானா பாரீஸில் உயிரிழந்த நிலையில் அவர் சடலத்தை கொண்டு வருவது குறித்து மகாராணிக்கும், சார்லஸுக்கும் வாக்குவாதம் நடந்தது தெரியவந்துள்ளது.

டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பாரீஸில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய டயானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரின் உயிர் பிரிந்தது.

இந்த சமயத்தில் டயானாவை விவாகரத்து செய்த முன்னாள் கணவர் இளவரசர் சார்லஸ், அவர்களின் மகன்களான இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோர் விடுமுறையை கழித்து கொண்டிருந்தனர்.

டயானா இறந்த செய்தி முதலில் சார்லஸுக்கு சொல்லப்பட்டது.

இதை கேட்டு அவர் வருந்தினார். டயானா இறப்பு குறித்து தன் மீதும் தனது குடும்பத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தான் சார்லஸுக்கும், மகாரணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்த தகவலை பத்திரிக்கையாளரும், டயானாவின் நண்பருமான ரிச்சர்ட் கேட் Diana: 7 Days That Shock என்ற ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.

அதாவது, பாரீஸுக்கு ராஜ குடும்பத்துக்கு சொந்தமான விமானத்தில் சென்று டயானாவின் சடலத்தை பிரித்தானியாவுக்கு கொண்டு வர சார்லஸ் முடிவு செய்தார்.

இது தொடர்பாக மகாராணிக்கும், சார்லஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் ஒருவழியாக சார்லஸின் முடிவுக்கு மகாராணி சம்மதித்துள்ளார்.

இதையடுத்து டயானாவின் சகோதரிகள் ஜேன் மற்றும் சாராவுடன் சார்லஸ் பாரீஸுக்கு வந்தார். அங்கு அவரை பிரான்ஸின் அப்போதைய ஜனாதிபதி ஜாக்குயிஸ் சந்தித்தார்.

இதன்பின்னர் டயானாவின் சடலம் இருக்கும் மருத்துவமனைக்கு சார்லஸ் சென்றார், இது அவரின் வாழ்க்கையில் மிக மோசமான அனுபவம் என கூறப்பட்டுள்ளது.

சார்லஸை விவாகரத்து செய்தவுடன் அரச பட்டங்கள் டயானாவிடம் இருந்து பறிக்கப்பட்டன.

இருந்த போதிலும் அவரின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து ராஜ மரியாதையுடன் எடுத்து வர சார்லஸ் சம்மதித்தார்.

இதையடுத்து டயானா இறந்து 16 மணி நேரம் கழித்து அவரின் உடல் பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையும் படியுங்க :   ஓர்லாண்டோ துப்பாக்கிதாரி இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமானவர்- எப்.பி.ஐ

Related Posts

About The Author

Add Comment