கருகலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சித்தப்பா..!

பத்தாம் வகுப்பு மாணவியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய மீன் வியாபாரிக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

விருத்தாசலம் வட்டம் சீ.கீரனூர் ஊராட்சிக்குட்பட்ட ஏ.வள்ளியம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி. இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சித்தப்பா உறவுமுறை கொண்ட சின்னதுரை.

இவர் கடந்த 7.3.2017 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வந்து வீட்டில் தனியாக இருந்த மாணவியை பிற்பகலில் அங்கு வந்த சின்னதுரை தன்னுடன் அழைத்துச் சென்று பச்சையம்மாள் கோயில் பின்புறம் உள்ள முருகன் என்பவரின் கரும்பு வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்து வெளியே சொன்னால் குடும்ப மானம் போய் விடும் எனக்கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.

இதுபோன்று இரண்டு முறை நடந்துகொண்டுள்ளார் சின்னதுரை. பிறகு, கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து சாப்பிடுமாறும் கருக்கலைந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். அதன்படி அந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்த மாணவி கடுமையான வயிற்றுவலியும் கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகுதான், நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் சின்னதுரையை கைது செய்து அவர் மீது கடத்தல், போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் அளித்த தீர்ப்பில், மாணவியை கடத்திய குற்றத்திற்காக 5 வருடம் சிறையும் ரூ 5 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் சிறையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு இலவச சட்ட உதவி மையத்திற்கும் பரிந்துரைத்தார்.

இதையும் படியுங்க :   அதிர்ச்சியில் பெற்றோர்! மகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..!

Related Posts

About The Author

Add Comment