பணக்கார வாழ்க்கை….இன்று ரோட்டில் படுத்து தூங்கும் நபர்!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது சொத்துக்கள், வீடுகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பர்னிச்சர் கடைக்கு வெளியே உள்ள ரோட்டில் படுத்து தூங்குகிறார்.

எர்ணாகுளத்தில் பெரிய வீடு, 300 பாரா நெல் விளையும் நிலங்களுடன் வசதியாக வாழ்ந்தவர் கிருஷ்ணனன். தனது பெற்றோருடன் உதவியாக இருந்து வேலை பார்த்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் மழையின் காரணமாக தீவிர நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள்.

அதன்பிறகு தனது குடும்ப கஷ்டத்தை போக்க Willingdon தீவுக்கு சென்று பணியாற்றியுள்ளார். அங்கு கப்பலில் வேலை பார்த்துள்ளார். மேலும் இவரது தாயும் நண்டுகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சம்பாதித்த பணத்தை வைத்து ஓரளவுக்கு குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார். 27 வயதில் கிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகியுள்ளது. ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

இவர், Willingdon தீவில் இருந்தபோது மனைவிக்கு காலரா காய்ச்சல் வந்து இறந்துபோனார். அதன்பிறகு திரும்பிவந்த நான் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்து கையில் பணம் இல்லாமல், வசிப்பதற்கு வீடும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக கடைக்கு வெளியே தங்கியிருக்கிறேன்.

ரோட்டில் படுத்திருந்தாலும் கடவுள் உருவில் சில மனிதர்கள் எனக்கு சாப்பிட உதவி செய்கிறார்கள் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   பிடிக்காத கணவர் உட்பட, குடும்பத்தில் உள்ள 13 பேரை விஷம் வைத்துக் கொன்ற விபரீதப் பெண்!

Related Posts

About The Author

Add Comment