அதிர்ச்சி சம்பவம்! தாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள்

இங்கிலாந்தில்  செவிலியராக பணிபுரிந்து வரும் பெத்தான் சிம்சன் (26) என்கிற தாய், 20 வார கர்ப்பிணியாக இருக்கும் போது, செல்ம்ஸ்போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரூம்பீல்ட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது சாதாரணமாக குழந்தைகளுக்கு இருப்பதை விட தலை இருக்கும் நிலை மாறி இருந்தது.
பின்னர் மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது, குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சியில் குறை இருப்பதை கண்டறிந்துள்ளனர். கருவிற்குள் இருக்கும்போதே குழந்தைக்கு சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றாலும் கூட, தற்போது சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், குழந்தை பிறந்த உடனே அது நடக்கும் திறனை பாதிக்கும் என்பதை பற்றி மருத்துவர்கள் விளக்கி கூறியுள்ளனர்.

இதனை பற்றி நன்கு யோசித்த பெத்தான் சிம்சன் மற்றும் அவருடைய கணவர் கியுரோன் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து பெல்ஜியத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த அறுவை சிகிச்சையானது லண்டன் மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்டது. பெல்ஜியம் மருத்துவர்களுடன் இணைந்து லண்டன் மருத்துவர்களும் இதில் ஈடுபட்டனர்.
குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் பின்னர் மீண்டும் குழந்தையை கர்பப்பையிலே வைத்து தைத்தனர். இந்த அறுவை சிகிச்சையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு வல்லுநர்கள், லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனை வல்லுநர்கள் முக்கிய பங்கு ஆற்றினர்.
இந்த சம்பவமானது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், துணிவுடன் அறுவை சிகிச்சைக்கு தயாரான தம்பதியினருக்கு தங்களுடைய நன்றியினை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-dailythanthi
இதையும் படியுங்க :   பாடம் நடத்துவதாக மாணவியின் அந்தரங்க உறுப்பை தொட்டு விளையாடிய ஆசிரியர்.!

Related Posts

About The Author

Add Comment