சுவாரஸ்சியா தகவல்! அம்மாவிடம் இருந்து பணத்தை திருடிய சிறுவன்: இன்று எத்தனை எத்தனை மில்லியன்களுக்கு அதிபதி தெரியுமா?

அம்மாவின் டெபிட் கார்டில் இருந்து £30,000 பணத்தை திருடிய சிறுவன், இன்று பிரித்தானியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனாக வலம்வருகிறார்.

ஆண்ட்ரூ மைக்கேல் இங்கிலாந்தின் மிக வெற்றிகரமான தொழில்நுட்ப வல்லுநர்களால் ஒருவராக 150 மில்லியன் பவுண்டுகள் சொத்திற்கு அதிபதியாகவும் இருந்து வருகிறார்.

ஆனால் அவர் தன்னுடைய 17 வயதில் பள்ளிப்பருவத்தின் போது, A-level திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு நண்பருடன் வலைத்தள வணிக வணிகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்து சிரமப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கும் மைக்கேல், என்னுடைய சக பள்ளித்தோழன் அலெக்ஸ் வைல்டிங் உடன் இணைந்து, ஃபாஸ்ட்ஹோஸ்ஸை உருவாக்கினோம். அது, மின்னஞ்சல்களையும் வலை சேவையையும் சிறு தொழில்களுக்கு வழங்கியது.

இதனை Gloucs-வில் அமைந்துள்ள என்னுடைய அம்மாவின் வீட்டில் ஒரு சிறிய அறையில் இருந்து செய்ய ஆரம்பித்தோம். அந்த வீட்டில் தேவையான கணினிகள் இருந்ததால், மென்பொருளை உருவாக்கினோம்.

ஆனால் அதற்கு அதிவேக இணையதள வசதி தேவைப்பட்டதால், £30,000 செலவாகும் என கூறினார்கள். அதற்கான போதிய பணம் எங்களிடம் இல்லாததால், உடனே என்னுடைய அம்மாவின் டெபிட் கார்டை திருடி அதிலிருந்து £30,000 பணத்தை எடுத்துக்கொண்டேன்.

வேகமாக பணத்தை சம்பாதித்து அம்மாவிற்கு தெரியாமல் மறுபடியும் போட்டுவிடலாம் என முயற்சி செய்தேன்.

அதன்படி மாத இறுதியில் எனக்கு நல்ல வருமானம் வந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். வளர்ந்துவரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் எங்களுடைய பட்டியலும் இடம்பெற்றது.

உடனடியாக £61.5 மில்லியன் பணத்திற்கு நிறுவனத்தை விற்றுவிட்டு, புதிய நிறுவனத்தை அடுத்த இரண்டு வருடங்களில் துவங்கினேன். ஆன்லைனில் அதிகமான கோப்புகளை சேமித்து வைப்பதற்கான சேவை 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நிறுவனமும் அதிக கவனம் பெற்று பெரிய வருமானத்தை ஈட்டியது. அதனை இரண்டு வருடங்கள் கழித்து மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்தேன். அதன்பிறகு 2014-ம் ஆண்டு மற்றொரு நிறுவனத்தை புதிதாக துவங்கினேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   லண்டனில் அமிலத்தாக்குதல்கள் வோல்தம்ஸ்ரோ -ரொற்ரென்ஹம் பகுதிகளில் இருவர் காயம்

Related Posts

About The Author

Add Comment