அதிர்ச்சி சம்பவம் ! 53 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தப்பட்ட 15 வயது சிறுமி!

இந்தியாவில் 53 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி 15 வயது சிறுமியை மாமா வற்புறுத்தியதால், அந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Yadadri Bhongir மாவட்டத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு சிறுமி Motakonduru பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

இவரின் பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அந்த சிறுமி தன்னுடைய மாமாவின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் மாமா பாஸ்கர் என்பவர், ஏறகனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் 53 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி கடந்த சில மாதங்களாகவே சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் சிறுமிக்கு இதில் விருப்பமில்லை என்பதால், மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுச் சிறையில் அவர் வைத்துள்ளார்.

இதனால் சிறுமி அவர்களிடமிருந்து எப்படியோ தப்பி அங்கிருக்கும் மிகப் பெரிய வாட்டர் டேங்க் ஒன்றில் ஏறி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அப்படி அவர் வாட்டர் டேங்கில் ஏறிக் கொண்டிருந்ததைக் கண்ட அங்கிருந்த மக்கள், உடனடியாக சிறுமியை மீட்டுள்ளனர். அதன் பின் அவரிடம் கேட்ட போது அவர் நடந்ததை கூறி கண்ணீர்விட்டுள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் சிறுமியை திருமணத்திற்கு வற்புறுத்திய மாமா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படியுங்க :   ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மையே: சசிகலாவுக்கு தெரியும்! அண்ணன் பரபரப்பு பேட்டி..

Related Posts

About The Author

Add Comment