நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்7 வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியது சாம்சங்

சாம்சங் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று கூறப்படும் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெளியீட்டு தேதியை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடக்கும் விழாவில் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கேலக்ஸி 7 வெளியீட்டுக்கு அடுத்த நாளே சர்வதேச மொபைல் காங்கிரஸ் மாநாடு தொடங்குவதால் 21-ம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி எஸ்7 எட்ஜ், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் பிளஸ் ஆகிய மூன்று மாடல்கள் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்க :   iPhone SE ஸ்மார்ட்கைப்பேசி பற்றிய புதிய தகவல்!

Related Posts

About The Author

Add Comment