ஷாக்கிங் புகைப்படங்கள்! இளவரசி கேட்டை மிதித்து, முடியைப் பிடித்து இழுக்கும் மேகன்:

பிரித்தானிய இளவரசிகள் கேட்டுக்கும் மேகனுக்கும் உரசல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒருவரை ஒருவர் கை நீட்டி அடித்துக் கொள்ளும் அளவுக்கு போவார்களா?

ஆனால் மேகன் கேட்டின் தலை முடியைப் பிடித்து இழுப்பதும், கேட் மேகனின் கழுத்தைப் பிடித்து நெரிப்பதும், பதிலுக்கு மேகன் கேட்டின் அடிவயிற்றில் மிதிப்பதுமாக வெளியாகியுள்ள படங்கள் பார்ப்போரை திடுக்கிடச் செய்கின்றன.

ஆனால் மேகன் கர்ப்பமாக அல்லவா இருக்கிறார், இந்த படங்களில் அவரது வயிற்றைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்று விசாரித்தால்தான் உண்மை வெளி வருகிறது.

உண்மையில் அடிப்பது மேகனும் இல்லை, அடி வாங்குவது கேட்டும் இல்லை என்று தெரியவந்தபிறகுதான் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது.

ஆலிசன் ஜாக்சன் என்னும் புகைப்படக் கலைஞரின் வேலைதான் இது என்பது பின்னர் தெரியவந்திருக்கிறது.

ஆலிசன், இதேபோல், பிரபலங்களைப்போல் காட்சியளிப்பவர்களை வைத்து வேடிக்கையாக போட்டோ ஷூட் செய்வது வழக்கமாம்.

இதற்குமுன் அவர் அமெரிக்க அதிபர்கள், ட்ரம்ப், ஒபாமா மற்றும் போரிஸ் ஜான்ஸன் உட்பட பிரபலங்களைபோல் காணப்படுபவர்களை நடிக்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளாராம்.

தற்போது அவர் மேகன் மற்றும் கேட் போல் இருக்கும் நடிகையரை வைத்து இந்த அடிதடி காட்சிகளை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க :   2018ல் புரட்டி போடப்போகும் பயங்கர நிலநடுக்கம், சுனாமி..!

Related Posts

About The Author

Add Comment